• Feb 20 2026

மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது ஜனநாயகன் திரைப்படம்.. சென்சார் கிடைக்குமா.?

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ளவர். அவருடைய கடைசி படமான ஜனநாயகன் தற்போது பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் தாமதத்தில் உள்ளது. இந்த படத்தை இயக்கியவர் ஹெச். வினோத். ஜனநாயகன் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.


படத்திற்கு இசையமைப்பை அனிருத் வழங்கியுள்ளார். ஜனநாயகன் படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி ஜனவரி 9 என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்சர் பிரச்சனை காரணமாக படம் இன்னும் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை.

தற்போது, தயாரிப்பு நிறுவனம் சென்சர் சான்றிதழ் பெறுவதற்காக திரைப்படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியுள்ளது. அதன்படி, விரைவில் சென்சார் சான்றிதழ் கிடைக்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது. 

Advertisement

Advertisement