• Dec 09 2025

ரஜினி–மீனா கெமிஸ்ட்ரி மீண்டும் திரையில் களைகட்டுமா.? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு தற்பொழுது இரட்டை சந்தோஷமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 1993ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய எஜமான் திரைப்படம், வருகிற டிசம்பர் 12ஆம் தேதி, அதாவது ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று, மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக உள்ளது என்ற தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. 

ரஜினிகாந்தின் அரை நூற்றாண்டு திரைப்பயணத்தை (50 Years of Rajini Cinema) கொண்டாடும் விதமாகவே இந்த ரீ-ரிலீஸ் திட்டம் அமைக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


1993ஆம் ஆண்டு வெளியான எஜமான் ஒரு கிராமப்புற கதையை மையமாகக் கொண்டு உருவான படம். அந்தக் காலத்தில் ரஜினிகாந்தின் மவுசை இன்னும் உயரத்தில் ஏற்றச்செய்த படங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இப்படம் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.


ரஜினிகாந்தின், அதிரடியான ஸ்டைல் மற்றும் உணர்ச்சி மிகுந்த நடிப்பு ஆகியவை எஜமான் படத்தை மேலும் வலுவானதாக மாற்றின. எஜமான் படத்தில் நாயகியாக நடித்த மீனா, அந்த காலத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த பிரபல நடிகைகளில் முன்னணியில் இருந்தார்.

இவர்களின் கெமிஸ்ட்ரி, படத்தின் பலமான அம்சங்களில் ஒன்றாக கருதப்பட்டது. அத்தகைய படம் மீண்டும் ரிலீஸாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement