• Dec 09 2025

நீ எனக்கா பொறந்த... அப்பான்னு கூப்பிட.! மிஸ்கினின் மனதை உலுக்கிய இளையராஜாவின் வார்த்தை

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான மிஸ்கின், சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தனது மனதை உலுக்கிய சம்பவத்தை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். தனக்கும் இசை மேதை இளையராஜாவிற்கும் இடையே ஒரு நாள் ஏற்பட்ட விவாதத்தை திறம்பட பேசியுள்ளார். இது தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.


அதன்போது மிஸ்கின், ஒரு நாள் பாட்டு சம்மந்தமா தனக்கும் இளைஜராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவர் தெரிவித்ததாவது, "நான் எப்பவுமே இளையராஜா சார்-ஐ அப்பான்னு தான் கூப்பிடுவேன். 

அன்னைக்கு ஒரு நாள் விவாதம் முற்றி இளையராஜா எழுந்து போய்ட்டார். நான், அப்பா அப்பான்னு கூப்பிட்டுட்டே இருந்தேன். அதுக்கு அவர் நீ எனக்கா பொறந்த அப்பா அப்பான்னு கூப்பிடுற,  இனிமேல் கூப்பிடாதனு சொல்லிட்டார். அது தனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது." என்று கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement