• Apr 16 2025

கடனை திருப்பிக் கொடுப்பாரா மீனா? குதூகலத்தில் கொண்டாடிய விஜயா...!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சிந்தாமணி விஜயாவுக்கு கால் எடுத்து மீனாட பிஸ்னஸ் அப்புடியே படுக்கப் போது என்று சொல்லுறாள். அதைக் கேட்ட விஜயா என்ன சொல்லுறீங்க சிந்தாமணி என்று கேக்கிறாள். அதுக்கு சிந்தாமணி இப்ப மீனா எடுத்திருக்கிற ஓடர்ல அவளுக்கு 2லட்சம் நஷ்டம் வந்திருச்சு என்று சொல்லுறாள். இதைக் கேட்ட விஜயா ரொம்பவே சந்தோசப்படுறாள்.

பிறகு விஜயா வீட்டுக்கு அடங்காதவளா நீங்க அடக்கிட்டீங்க ரொம்ப தாங்ஸ் என்று சொல்லுறாள். பின் சிந்தாமணி இப்ப பாருங்க மீனா வீட்டுக்கு அழுதுகிட்டே வருவா பாருங்க என்கிறாள். அதுக்கு விஜயா வரட்டும் என்கிறாள். பிறகு விஜயா இந்த சந்தோசத்த எப்படிக் கொண்டாடலாம் என்று பிளான் பண்ணுறாள்.


அதைத் தொடர்ந்து ரவிக்கு கால் எடுத்து ஹோட்டல்ல இருந்து விதம் விதமா சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்திரு என்கிறாள் விஜயா. இதனைக் கேட்ட ஸ்ருதி உங்கட அம்மா இப்படி சந்தோசமா இருக்கிறாங்க என்றால் யாருக்கோ கஷ்டம் என்று தானே அர்த்தம் எங்கிறாள்.

பிறகு மீனா அந்த ஓனர் வீட்ட போய் கெஞ்சிக்கொண்டிருக்காள். அப்ப அந்த ஓனர் முத்துவ கேவலமா கதைக்கிறார். இதனால் மீனா ரொமபவே கோவப்படுறாள். பின் ரவி ஹோட்டல்ல இருந்து கொண்டுவந்த சாப்பாட எல்லாரும் ஒண்ணா இருந்து சாப்பிடுறார்கள். மீனா மட்டும் சோகத்தில ரூமுக்க இருக்கிறாள். அதைத் தொடர்ந்து மீனா முத்துவுக்கு நடந்ததை சொல்லி அழுது கொண்டிருக்காள். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement