• Oct 25 2025

ரஜினி எப்பேர்பட்ட அழகர்; விஜய் வீட்டுக்கு GAS போட வந்தவன் போல இருக்காரு.! அந்தணன் கலாய்

Aathira / 8 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் விஜய்.  இவருடைய நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.  அதே நேரத்தில் இளைய தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் தலைவராகவும்  மக்களுக்காக செயற்பட்டு வருகின்றார். 

சமீபத்தில் கரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது  விஜயை பார்ப்பதற்காக சென்ற 41 பேர் பரிதாபமாக கூட்ட நெரிசலில்  சிக்கி உயிரிழந்தனர். இது விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு மிகப்பெரிய கருப்பு புள்ளியாக அமைந்தது. 

இதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு  செய்யும் பரிகாரமாக அவர்களுடைய குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும்  வழங்கினார்.  மேலும் அவர்களை  வீடியோ காலில் தொடர்பு கொண்டு ஆறுதலும் தெரிவித்து இருந்தார். 

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்காக கொண்டு விஜயின் அரசியல் கட்டங்கள் நகர்ந்து வருகின்றன.  இதற்கு பலரும்  ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.  அரசியல் தலைவர்களுக்கிடையிலான போட்டியும் அதிகரிக்கின்றது. 


இந்த நிலையில், பிரபல  விமர்சகர் அந்தணன் ரஜினியையும் விஜயையும் ஒப்பிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார். தற்போது இது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. 

அதன்படி அவர் கூறுகையில், கரூர் விகாரத்திற்கு பிறகு விஜயை காணவில்லை. அவர் அமைதி காக்கின்றார். ஆனால் அவருடைய எதிர் கட்சியில் உள்ளவர்கள் பல சர்ச்சை கருத்துக்களை பேசி வருகின்றனர்.

அதிலும் ஒருவர், ரஜினிக்கு முகத்தில் ஒரு கலை இருக்கின்றது... அவர் எப்பேர்பட்ட அழகர் தெரியுமா?  சமீபத்தில் நடைபெற்ற இளையராஜா பங்ஷனில்  அவர் எப்படி ஸ்டைலாக அமர்ந்திருந்தார் தெரியுமா.?   ஆனால் விஜயை பார்த்தால் வீட்டிற்கு கேஸ் போட வந்தவர் போல இருக்கார்.

விஜய் அவருடைய அப்பா மூலம் வளர்ந்தவர். ஆனால் ரஜினி தனது சொந்த முயற்சியால் வளர்ந்தவர் என்று அந்த நபர் தெரிவித்ததாக அந்தணன் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement