• Oct 25 2025

சம்பளம் அதிகமாக கேட்க மாட்டேன்.. நியாயமானதை மட்டுமே கேட்பேன்.! பிரியாமணி ஓபன் டாக்.!

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

தற்பொழுது தமிழ் சினிமா உலகில் பிரபலங்களின் சம்பள விவகாரங்கள் அதிக கவனத்தை பெற்றுள்ளன. அதில், நடிகை பிரியா மணி சமீபத்தில் தனது சம்பளத்தைப் பற்றி மனம் திறந்து பேசியது இணையத்தை சூடேற்றிவருகிறது.


நடிகை பிரியா மணி ஒரு சில ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கியமான படங்களில் நடித்து வருகிறார். அவருடைய நடிப்பு திறமை, குரல் மற்றும் நடனம் ஆகியவை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் ஒரு பேட்டியில், பிரியா மணி தனது சம்பளத்தைப் பற்றி பேசிய போது, அவரது வார்த்தைகள் நேர்மையும் புரிதலும் நிரம்பியிருந்தது.

அதன்போது, “பிரபலங்களின் மார்க்கெட் அடிப்படையில் சம்பளம் கேட்பதும், பெறுவதும் தவறில்லை. தகுதியான சம்பளம் கிடைப்பது நியாயமானது தானே. எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும் அது என்னைப் பாதிப்பதில்லை. என் மதிப்பு என்னவென்று எனக்குத் தெரியும். எனக்குத் தகுதியான சம்பளத்தை தான் கேட்பேன். அதிகமாக கேட்க மாட்டேன்.” என்று கூறியிருந்தார் பிரியா மணி. 


இந்த பேச்சு பிரியா மணியின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துகிறது. அவருடைய வார்த்தைகள், சம்பளத்தைப் பற்றி சிந்திக்கும் அனைத்து நடிகர்களுக்கும் ஒரு ஊக்கமாகவும், உத்வேகமாகவும் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement