பிக்பாஸ் சீசன் 9 தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் தனித்துவமான பேச்சாற்றல் மற்றும் சண்டைகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவனத்தை ஈர்க்கிறது. சமீபத்தில் நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது திவாகர் மற்றும் வியானா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்பானதாகும்.

பிக்பாஸ் வீட்டில், போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் நேரடி கருத்துக்களை வெளிப்படுத்தும் முறையில் செயல்படுவார்கள். அவ்வாறே திவாகர் வியானாவிடம் ஜாலியாக கருத்து ஒன்றை தெரிவித்தார். அதாவது, “நான் பேசாம பார்வதியை கல்யாணம் பண்ணிடவா?” என்று வியானாவிடம் கேட்டார்.

அதற்கு வியானா அளித்த பதில் ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது. அவர், “அண்ணே..! தங்கச்சின்னு கூப்பிட்டுட்டு அப்படி பண்ணுறது நல்லா இருக்காது.” எனச் செருப்படி அட்வைஸ் அளித்தார். இந்த பதில், சமூக ஊடகங்களில் மிகவும் பகிரப்பட்டு, நகைச்சுவை மற்றும் நேர்மையான பதிலடி என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Listen News!