விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை சேர்ந்த ஒரு சிலர் ஒவ்வொரு சீசனிலும் கலந்து கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 ஆவது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஜனனி.
இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார். இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் வயது குறைந்த போட்டியாளராக ஜனனி காணப்பட்டார்.
இதனால் ஜனனி பேசிய ஆங்கில சொற்கள் சில நேரங்களில் ட்ரோல் செய்யப்பட்டாலும், சில நேரங்களில் ரசிக்கப்பட்டது. அதுபோல ஜனனிக்கு அதிகமான ரசிகர்கள் பேன்ஸ் பேஜ் தொடங்கி இருந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஜனனிக்கு லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலாவது படமே விஜய், திரிஷாவுடன் நடிக்க கிடைத்ததால் மேலும் பிரபலம் அடைந்தார். அதற்குப் பிறகும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. சமீபத்தில் வெளியான உசுரே படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில், பிக் பாஸ் ஜனனி கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் அவர், விஜய் நடித்த லியோ படத்தில் நடித்ததற்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. மக்கள் எனது நடிப்பை ஏற்றுக்கொண்டனர். நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றத்திற்கு பின்னர் பிக் பாஸ் பார்ப்பது கிடையாது என்று தெரிவித்துள்ளார்..
Listen News!