தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் மும்பையில் ஒரு முக்கியமான சந்திப்பில் கலந்துகொண்டார். பாலிவுட் திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பு தற்போது ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் இந்திய திரையுலகில் தமிழில் நடித்து தன்னை மக்கள் மனதில் நிலைநிறுத்தி வருகிறார். அவரின் நடிப்பு திறமை, தனித்துவமான கதாபாத்திர தேர்வுகள் என்பன அவரது பிரபலத்துக்கு காரணமாகும். தற்போது, அவரது மும்பை பயணம் மற்றும் பன்சாலி அலுவலக சந்திப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பாக இருவரும் எதுவும் வெளியிடவில்லை. இதனால், இணையத்தில் பல கற்பனைக்கு வழி ஏற்பட்டுள்ளது. சில ஊடகங்கள் சிவகார்த்திகேயன் பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என்று பரவலாக செய்திகள் வெளியிடுகின்றன. இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாததால், ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
Listen News!