தற்போது பிக்பாஸ் சீசன் 9 பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளங்களில் புதிய விவாதங்கள், கருத்துகள், விமர்சனங்கள் மழையாகக் குவிகின்றன. இந்நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்களின் நடத்தை குறித்து ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, இந்த சீசனில் நிகழும் சில நிகழ்வுகள் “குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு கேவலமாக நடக்கிறது” என ரசிகர்கள், பார்வையாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, இந்த விமர்சனத்துக்கு அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9, ஆரம்பமான முதல் நாளிலிருந்தே பேசுபொருளாக மாறியது.
முந்தைய சீசன்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை நிகழ்ச்சியில் இடம்பெறும் பிரச்சினைகள், சண்டைகள், கிசுகிசுக்கள் எனப் பல விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன.
இந்நிலையில் வெளியான விமர்சனங்களுக்கு விஜய் சேதுபதி, " இந்த சீசனை குழந்தைகளோடு ஒக்காந்து பார்க்க முடியலன்னு ஒருத்தர் சொன்னாங்க... அவங்களுக்கு நான் சொன்ன பதில் "நம்ம வீட்டு குழந்தைங்க என்ன பாக்கணும் வேணாம்னு நாம தான் முடிவெடுக்கணும்.. உங்க கைல ஒரு ரிமோர்ட் இருக்கு நீங்க சேனலை மாத்திட்டு போங்க...." என்று பதிலளித்துள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!