தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர் மற்றும் பல திரைப்படங்களில் காமெடி, ரோல் மாடல் கதாபாத்திரங்களில் தோற்றமளித்த பார்த்திபன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்த்திபன் அதன்போது,“நாங்க வீட்டில தெலுங்கு தான் பேசுவோம். எங்க டைரெக்டர் பாக்யராஜ் சாரும் வீட்டில தெலுங்கு தான் பேசுவார். ஆனா சமூக வலைத்தளத்துல தெலுங்கு பேசினாலே கெட்ட கெட்ட வார்த்தைல திட்டுறாங்க... தெலுங்கு பேசினாலே கேலி பண்ணுறாங்க...” என்று கூறியுள்ளார்.
இந்தக் கருத்து, தமிழ் சினிமா மற்றும் சமூக ஊடகங்களில் தெலுங்கு பேசுவோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேட்டி வெளியானவுடன், சமூக வலைத்தளங்களில் இருபக்கமும் சார்பான கருத்துகள் கிளம்பியுள்ளது. சிலர் பார்த்திபனின் கருத்தை ஆதரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!