தமிழ் தொலைக்காட்சி உலகில் மிகவும் பிரபலமான தம்பதியர்களில் ஒருவர் ஹுசைன் மற்றும் மணிமேகலை. இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் உலகையும் சமநிலைப்படுத்தி வாழும் விதம் ரசிகர்களிடையே எப்போதும் பேசுபொருளாக இருந்து வருகின்றது.

இவர்கள் இருவரும் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், ஒருவரின் கலாச்சாரம் மற்றும் மரபுகளை மற்றொருவர் மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு வாழும் விதம் பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.
மணிமேகலை ஒரு பிரபல தொலைக்காட்சி ஆங்கர், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் “சிங்கிள் பசங்க” நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அவரது நகைச்சுவை, சுறுசுறுப்பான பேச்சு மற்றும் நேர்த்தியான ஆங்கரிங் பாணி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மணிமேகலை இந்து மதத்தைச் சேர்ந்தவர், ஹுசைன் முஸ்லீம் சமயத்தைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்கள் மதத்தை மாற்றாமல், “ஒருவரின் மதத்தை ஒருவர் மதித்து வாழ்வோம்” என்ற கொள்கையில் வாழ்ந்து வருகிறார்கள். இது இன்றைய சமூகத்தில் அரிதாகக் காணப்படும் அழகான உதாரணமாகும்.
மணிமேகலை, தனது கணவர் ஹுசைனின் மத வழக்கங்களை பெருமையுடன் மதித்து வருகின்றார். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகை வரும் போதும், அவர் தனது கணவருக்காக நோன்பு நோற்று, அந்த பண்டிகையை கொண்டாடி வருகிறார்.

அவரது இந்த செயல், சமூக ஊடகங்களில் பெருமளவில் பாராட்டப்பட்டுள்ளது. பலரும், “இது தான் உண்மையான மத ஒற்றுமை” என்று கூறி, இவர்களை “இன்ஸ்பிரேஷனல் தம்பதியர்கள்” என அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஹுசைன் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார். தனது மனைவி மணிமேகலைக்காகவும், தனது நம்பிக்கைக்காகவும் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளார். இந்த செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சபரிமலை மாலை அணிந்த ஹுசைனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!