தற்போது பிக்பாஸ் சீசன் 9-ன் promo வெளியாகி மக்களைக் கவர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் வெளியாகும் புரொமோக்கள் (Promo) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் விவாதங்களையும் உருவாக்கி வருகின்றன.

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள புதிய புரொமோவில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி தனது நகைச்சுவை கலந்த பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அத்தோடு, போட்டியாளர்கள் கனி, கம்ருதீன், மற்றும் பார்வதி ஆகியோருடன் நடந்த உரையாடலும் தற்போது வைரலாகி வருகிறது.
அதில், விஜய் சேதுபதி கனியோட தலைமையில் வீடு எப்புடி இருந்தது என போட்டியாளர்களிடம் கேட்கிறார். அதுக்கு கம்ருதீன், "கனி ரெண்டு ரோலும் play பண்ணுறாங்க... எனக்கு குழப்பமா இருக்கு என்கிறார்.

அதைக் கேட்ட பார்வதி, கம்ருதீன் சொல்ல வாறது எனக்கு புரியல என்கிறார். அதுக்கு கம்ருதீன் பார்வதிக்கு திரும்ப விளக்கம் சொல்லுறார். அதைப் பார்த்த விஜய் சேதுபதி, சத்தமா கதைங்க கம்ருதீன் ஜெயிலுக்குள்ள மெதுவா கதைச்ச மாதிரி இருக்காதீங்க என்கிறார்.
மேலும் விஜய் சேதுபதி, வெட்கமே இல்லாமல் வேலையை பார்த்திட்டு வண்டி வண்டியா வெட்கப்படுறாங்க என்று மக்களைப் பார்த்துச் சொல்லுறார். அத்துடன் விஜய் சேதுபதி பார்வதியைப் பார்த்து இங்க நீங்க வீட்டுத் தலைவியா இருந்திருந்தால் என்ன செய்திருப்பீங்க தெரியுமா என்று சொல்லிட்டு "இது என்னோட game அக்கா...." என்று சுத்தி திரிஞ்சிருப்பீங்க என்கிறார். இவ்வாறாக இன்றைய promo-வில் நடுவர் விஜய் சேதுபதி போட்டியாளர் பார்வதியை கலாய்ச்சுக் கொண்டிருக்கிறார்.
Listen News!