• Oct 08 2026

முதல் பாகம் செய்த சாதனையை காப்பாற்றுமா.? ‘இந்தியன் 3’ குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்

shali / 7 hours ago

Advertisement

Listen News!

ஒரு திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டால், அதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரிக்கும். ஆனால், முதல் பாகம் பெற்ற வெற்றியை அடுத்தடுத்த பாகங்கள் தக்க வைத்துக்கொள்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதற்கு கதையும், திரைக்கதையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும்.

அந்த வகையில், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் ‘இந்தியன்’. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘இந்தியன் 2’ மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியானது.

முதல் பாகத்தின் வெற்றியை மனதில் வைத்து ரசிகர்கள் ‘இந்தியன் 2’ படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், திரைப்படம் வெளியான பிறகு ரசிகர்களிடமிருந்து எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. குறிப்பாக, முதல் பாகத்துடன் ஒப்பிட்டு பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள ‘இந்தியன் 3’ திரைப்படம் தொடர்பான பணிகளை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘இந்தியன் 3’ மூலம் கமல்ஹாசன்–ஷங்கர் கூட்டணி மீண்டும் ரசிகர்களை கவருமா என்பதே தற்போது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. முதல் இரண்டு பாகங்களுக்குப் பிறகு இந்த மூன்றாம் பாகம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement