• Jan 19 2025

‘சிறகடிக்க ஆசை’: ரோஹினி கர்ப்பம்? விஜயா மகிழ்ச்சிக்கு இதுதான் காரணமா? ஆனால் அதிலும் ஒரு சிக்கல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில் இன்றைய எபிசோடின் முடிவில் நாளை என்ற காட்சியில் திடீரென ரோஹினியை விஜயா கொஞ்சுவதும் மனோஜ்க்கு வாழ்த்து சொல்வதுமாக இருக்கும் காட்சியை பார்த்து பலர் குழப்பத்தில் இருக்கும் நிலையில் தற்போது இது குறித்த தகவல் கசிந்துள்ளது.

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ள நிலையில் ஸ்ருதி மற்றும் ரோஹினி தாலி கோர்க்கும் விழாவில் முத்து பிரச்னை செய்ததால் குடும்பமே பிரியும் நிலை ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

முத்து, ஸ்ருதியின் அப்பாவை அடித்த பரபரப்பில் விஜயா, ரோகினியின் அப்பா வருவதையே மறந்து விட்டார் என்பதும் தற்போது அவர் ஸ்ருதியை எப்படியாவது வீட்டுக்கு வரவழைக்க வேண்டும், முத்து மற்றும் மீனாவை வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடின் இறுதியில் திடீரென விஜயா, ரோஹினியை கொஞ்சுவதும் மனோஜ்க்கு கையை கொடுத்து வாழ்த்து தெரிவித்த காட்சிகள் உள்ளன. எதனால் திடீரென விஜயா மனம் மாறி இருக்கிறார் என்ற குழப்பத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.



நாளைய எபிசோடில் திடீரென ரோஹினி வாந்தி எடுப்பதாகவும் அதை பார்த்த விஜயா, ரோஹினி கர்ப்பமாக இருப்பதாக நினைத்துதான் மனோஜ்க்கும் ரோஹினிக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

ஆனால் ரோஹினி கர்ப்பம் இல்லை, நாள் முழுவதும் பங்க்ஷனில் நின்றதால் சாப்பிடாமல் இருந்ததால் வந்த சாதாரண வாந்தி என்பது விஜயாவுக்கு தெரியவில்லை. அடுத்தடுத்த நாள்களில் ரோஹினி கர்ப்பம் இல்லை என்று தெரிய வந்தால் என்ன நடக்கும் என்பதையும் வரும் எபிசோடுகளில் தான் பார்க்க வேண்டும்.

ஒருவேளை ரோஹினி உண்மையாகவே கர்ப்பமாக இருந்தால், கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் கூட உன் அப்பா வரமாட்டாரா என்று விஜயா கிடுக்கு பிடி கேள்வி கேட்கவும் வாய்ப்பு உள்ளது. இதையெல்லாம் ரோஹினி எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement