• Jul 27 2024

விஜய் படமே ரிஜெக்ட்டா? கோட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த மலையாள நடிகர்! விஜயின் அரசியல்தான் காரணமா

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் "கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம்" ஆகும். மாநாடு , மங்காத்தா போன்ற திரைப்படங்களை இயக்கிய வெங்கட் பிரபு குறித்த படத்தை இயக்குவதோடு யுவன் சங்கர் ராஜ இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் பிரபுதேவா , பிரசாந்த் , லைலா , சினேகா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் இதில் நடிபதற்காக வெங்கட் பிரபு அழைத்த போது அதை நிராகரித்துள்ளார் மலையாள நடிகர்.


மலையாளத்தில் முன்னணியாக இருக்கும் நடிகரும் , இயக்குநருமானவர் வினீத் சீனிவாசன் ஆவார். மலையாளத்தில் வெளியான "சைக்கிள்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் இன்றளவிலும் முன்னணி நடிகராகவும் , இயக்குனராகவும் உள்ளார். இவரை விஜயின் கோட் திரைப்படத்தில் நடிப்பதற்காக  வெங்கட்பிரபு அழைத்த போது அதனை நிராகரித்தது மட்டுமின்றி அதற்காண காரணத்தையும் கூறியுள்ளார்.


அவ்வாறு அவர் கூறுகையில் " கோட் படத்தில் நடிப்பதற்கு வெங்கட் பிரபு என்னை அழைத்தார். அப்பொழுது நான் 'வர்ஷங்களுக்கு சேஷம்' என்ற படத்தை இயக்குவதில் பிசியாக இருந்தேன்.அதனால் வெங்கட் பிரபுவிடம் இந்த வாய்ப்பை இழக்க நான் விருப்பவில்லை ஆனால் எனக்கு வேறு தெரிவில்லை என கூறினேன். ஆனால் நிச்சயம் நானும் வெங்கட் பிரபுவும் ஏதாவது ஒரு திரைப்படத்தில் இணைவோம்" என வினீத் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement