• Sep 20 2024

அஜித்தின் AK61 படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்- அட யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்த முக்கிய நடிகர் தான் அஜித். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் வலிமை. பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் வசூலில் அள்ளிக்குவித்தது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் எச்.வினோத்துடன் இணைந்து AK 61 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்கவுள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்து வரும் அப்படத்தின் ஷூட்டிங்கில் புதிதாக ஒரு நடிகர் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. , ராஜதந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் வீரா AK 61 படத்தில் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

AK 61 திரைப்படம் ஏற்கனவே ஒரு வங்கி கொள்ளை குறித்த கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியிருந்தது. மேலும் சமீபத்தில் கூட இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/bqjWw-6zhzs


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement