• May 18 2024

கமல்ஹாசனுடன் கை கோர்க்கும் தளபதி விஜய்- மாஸ்டர் பிளான் போட்ட லோகேஷ் கனகராஜ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தற்பொழுது தனது 66 வது படத்தில் நடிதது வருகின்றார். இப்படத்தை இயக்குநர் வம்சி இயக்குவதோடு படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படத்தில் நடிக்கவுள்ள பிரபலங்கள் யாரென்பது குறித்தும் தகவல் வெளியாகியவாறு இருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து தளபதியின் 67 வது படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும் கடந்த சில நாட்களாகவே இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது.

இதற்கிடையில், படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது, படத்திற்கு யார் இசையமைப்பாளர் யார் தயாரிப்பாளர் என்பது குறித்த விவரங்கள் தற்போது தகவல்களாக பரவி வருகிறது.அதன்படி, தளபதி 67-படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படம் என்பதால், படத்தில் ஹீரோயின்கள் மற்றும் பாடல்கள் கிடையாதாம்.

பின்னணி இசை மட்டும் இருப்பதால், படத்திற்கான இசை பணியை லோகேஷ் சாம் சி எஸ்-யிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளாராம்.அதேபோல் படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித் குமார் தயாரிப்பார் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கும் படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/bqjWw-6zhzs


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement