• Apr 27 2024

அஜித் 'துணிவு' படம் பார்த்தாரா..? இல்லையா..? இதோ எச்.வினோத் கூறிய உண்மை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகராகப் போற்றப்படுபவர் அஜித். இதனால் தான் இவரை ரசிகர்கள் 'தல' என செல்லமாக அழைத்து வருகின்றனர். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. 


அதே போல் இவர் நடிப்பில் உருவாகும் படங்களோ ஏராளம். அந்தவகையில் அஜித் நடிப்பில் சமீபத்தில் 'துணிவு' திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. இப்படமானது ரசிகர்களிடமிருந்து சிறந்த விமர்சனங்களையே பெற்றிருக்கின்றது. அதுமட்டுமல்லாது வெளியாகிய நாள் முதலே வசூல் சாதனை நிகழ்த்திய வண்ணம் தான் இருக்கின்றது. 


இதனைத் தொடர்ந்து துணிவு பட இயக்குநர் எச்.வினோத் படம் குறித்து நிறைய பேட்டிகள் பலவற்றை கொடுத்து வருகிறார். அவ்வாறான ஒரு பேட்டியில் அஜித் துணிவு படத்தை முழுவதும் பார்த்தாரா எனக் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.


அதற்கு அவர் பதிலளிக்கையில் "டப்பிங் போது ஒரு சில காட்சிகள் பார்த்தார், அதன்பிறகு பார்க்கவில்லை. கண்டிப்பாக அவர் துணிவு பார்ப்பார், பார்த்துவிட்டு எனக்கு போன் செய்வார்" என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement