• May 18 2024

வீட்டுக்குப் போனாலே போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டு வந்தியா என்று கேட்கிறாங்க- விரக்தியில் பேசிய சூரி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு என்னும் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகியவர் தான் சூரி.இதனைத் தொடர்ந்து தவிஜய் அஜித் விஷால் சூர்யா கார்த்தி சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

இது தவிர தற்பொழுது கதாநாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இது ஒரு புறம் இருக்க சூரி நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை நிலம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்து விட்டதாக வழக்குத் தொடர்ந்தார்.

இந்தப் புகார் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் ஏற்கனவே மூன்று முறை விசாரணைக்கு ஆஜரான சூரி இன்று 4 வது முறையாகவும் ஆஜரானார். கடந்த ஏப்ரல் மாதம் 3வது முறையாக ஆஜரான சூரியிடம் 110 கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் இருந்து தகவல் வெளியானது.


இந்நிலையில், இன்று ஆஜரான சூரி, சுமார் 2 மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சூரி, "முன்பெல்லாம் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குப் போனால், ஷூட்டிங் போயிட்டு வரியான்னு கேப்பாங்க. ஆனா, இப்பலாம் வீட்டை விட்டு வெளியே போனாலே போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வரியா என குடும்பத்தினார் கேட்கின்றனர்.

 மேலும், முதல் முறை வந்தேன் விசாரணை நடந்தது. மறுபடியும் வந்தேன் விசாரணை நடந்தது. மறுபடியும் வந்தேன் அப்போதும் விசாரணை நடந்தது. இப்போதும் வந்தேன் விசாரணை மட்டும் தான் நடக்கிறது" என விரக்தியுடன் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசியுள்ள சூரி, "பண மோசடி வழக்கில் திரும்ப திரும்ப வருகிறேன், ஆனால் விசாரணை மட்டுமே நடைபெறுகிறது. எனக் கூறினார். அப்போது, எதிர்தரப்புக்கு சாதகமாக விசாரணை நடைபெறுகிறுதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "எந்த சாதகமும் வேண்டாம். விசாரணை நியாயமாக நடந்தால் போதும். காவல்துறை, நீதிமன்றம், கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. வேறு ஒன்றும் சொல்வதிற்கில்லை" என அதிருப்தியுடன் பதிலளித்துவிட்டு சென்றார். இந்த மோசடி புகாரில் இதுவரை 4 முறை சென்னை மத்திய குற்றபிரிவு அலுவலகத்தில் சூரி ஆஜராகியுள்ள நிலையில், விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி.,யுமான ரமேஷ் குடவாலா ஒருமுறை கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement