• Jul 27 2024

பள்ளியில் பொடிப் பையனாக இருக்கும் ரன்பீர் கபூரை பார்த்துள்ளீர்களா? வைரல் போட்டோஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் தான் நடிகர் ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அனிமல். 

இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா  நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் படு மோசமாக விமர்சிக்கப்பட்டாலும் வசூலில் சாதனை படைத்திருந்தது.


கடந்த வருட இறுதியில் வெளியான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 900 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. தற்போது இதில் நடித்த நடித்த ரன்பீர் கபூர் வரலாற்று திரைப்படமாக உருவாக்கப்படும் ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு  ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்து வருகின்றார். மேலும் அவருடன் கே.ஜி எஃப் புகழ் நடிகரான யாஷும் இணைந்து நடித்து வருகிறார்.


இந்த நிலையில், நடிகர் ரன்பீர் கபூரின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது . குறித்த புகைப்படத்தில் ரன்பீர் கபூர், அவரது ஆசிரியர் மற்றும் நண்பருடன் உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தில் இருக்கும் நண்பர் யார் எனக் கேட்டு வருகின்றார்கள்.


Advertisement

Advertisement