• Jan 19 2025

பாடலாசிரியர் கருணாகரனை வாழ்த்தி மாலையிட்ட சூப்பர் ஸ்டார் படப்பிடிப்பு தளத்தில் நெகிழ்ச்சி !

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான வல்லவன் படத்தில் காதல் வந்தாலே மனசு  தவிக்கும் எனும் பாடல் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானவர் பாடாலாசிரியர் கருணாகரன்.தொடர்ந்து பேரன்பு படத்தில் இவர் எழுதிய செத்து போச்சி மனசு என்ற பாடல் இவருக்கு கவித்துவமான பாடலாசிரியர் என்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தது .


தொடர்ந்து கார்த்தி, இயக்குனர் சுராஜ் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில் உருவான அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தின் வெற்றி பாடலான "பேட் பாய்ஸ்" பாடல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் வார்த்தை ஜாலத்தில் நுழைந்தார். பிறகு SS தமன் இசையில் டமால் டுமில் படத்தில் உஷா உத்துப் பாடிய டமால் டுமில் பாடல் மூலமாக ஜொலித்தார்.இவைதவிர  30க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார் கருணாகரன்.


இந்நிலையில் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் நடிப்பில் வெளிவரவிருக்கும் வேட்டையன்  திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் வெகுவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் பாடலாசியர் கருணாகரன் படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஸ்டாரை சந்தித்து மாலையிட அவ் மாலையை அவருக்கே திருப்பி அணிவித்து  வாழ்த்துக்களை வழங்கினார் ரஜனிகாந்த்.ரஜனிகாந்த்தின் இச் செயல் படப்பிடிப்பு தளத்தில் பெரும் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

Advertisement

Advertisement