• Jan 19 2025

அம்பாள் தீர்த்தம் என நடிகையிடம் கொடுத்த கோயில் குருக்கள்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

அம்பாள் தீர்த்தம் என நடிகையிடம் கோயில் குருக்கள் ஒருவர் கொடுத்து அந்த நடிகை மயக்கம் அடைந்தவுடன் பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள துணை நடிகை ஒருவர் தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து சினிமா வாய்ப்புகளை தேடி வந்தார். அவருக்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வேலை கிடைத்தது என்றும் அதில் வேலை பார்த்துக் கொண்டே சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்ததாகவும் ஒரு சில துணை கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவில் குருக்கள் கார்த்திக் என்பவர் அவருக்கு பழக்கம் ஆனதாகவும் அடிக்கடி இருவரும் வாட்ஸ் அப் மூலம் பேசிக் கொண்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் கோயில் குருக்களை ஒரு நாள் அந்த நடிகை வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது அம்பாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் கொடுத்ததாகவும் அதை குடித்தவுடன் அவர் மயங்கி விழுந்து விட்டதாகவும் தெரிகிறது.

மயக்கத்தில் இருந்த அந்த நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த கார்த்திக் அதன் பின் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. காலையில் கண்விழித்து பார்த்தபோது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை  அறிந்து அந்த நடிகை அதிர்ச்சி அடைந்து காவல்துறையிடம் புகார் அளித்ததாகவும் காவல்துறையினர் கோவில் குருக்களை விசாரித்து அவருடைய மொபைல் போனை சோதனை செய்தபோது அதில் பல பெண்களுடன் இருந்த போட்டோக்கள் இருந்ததாகவும் தெரிய வருகிறது.

இதனை அடுத்து கோயில் குருக்கள் கார்த்திக் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். கோவில் குருக்கள் ஒருவரிடம் அம்பாள் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தத்தை குடித்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement