• Mar 10 2026

'குக் வித் கோமாளி' புகழ் தாமுவுக்கு இப்படியொரு பிரச்சினை இருக்கா? டிடியை நிராகரித்த விஜய் டிவி?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இது மக்களின் மனம் கவர்ந்த சமையல் நிகழ்ச்சியாக காணப்படுகிறது. தற்போது தான் இதன் ஐந்தாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரையில் வெங்கடேஷ் பட், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்த நிலையில், இந்த சீசனில் அவர் பங்கு பற்றாமல் விலகி இருந்தார். இதைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சமையல் நிகழ்ச்சிக்கு அவர் தலைமை தாங்கி உள்ளார். அது தொடர்பான ப்ரோமோக்களும் வெளியாகி வெங்கடேஷ் பட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து இருந்தது.


இந்த நிலையில், பிரபல சமையல் கலைஞரான தாமு தான் இந்த துறைக்கு வந்து கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகிவிட்டதாகவும்  இதனால் 15 மணி நேரம் தினமும் நிற்க வேண்டி இருப்பதனால்  மூட்டு வலியே வந்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் 18 மணி நேர வேலையில் 15 நேரம் நிற்பதனால் தற்போது கொஞ்ச நேரம் இருப்பதும் கொஞ்ச நேரம் நிற்பதுமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.


அதேபோலத்தான் தொகுப்பாளினி டிடி, விஜய் டிவியின் பிரபலமாக இருந்த போதும் அவரின் காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விஜய் டிவியில் இருந்து விலகினார். ஆனாலும் உட்கார்ந்து கொண்டு பண்ணுற மாதிரி ஏதும் ஷோ இருந்தால் தன் தொகுத்து வழங்குகிறேன் என சொல்லியும் விஜய் டிவி அதனை நிராகரித்து விட்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement