• Jan 19 2025

தங்கம், வைரம் என கோடியில் புரளும் கங்கனா ரணாவத்தின் மொத்த சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? நீளும் லிஸ்ட்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படுபவர் தான் நடிகை  கங்கனா ரணாவத். இவர் தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளார். அரசியல் தொடர்பில்  இவர் செய்யும் பிரச்சாரங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும்.

தமிழ் சினிமாவில் தாம் தூம் என்ற படத்தில் மூலம் அறிமுகமானர்  கங்கனா ரணாவத். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு பாலிவுட் பக்கம் பிசியானதால் ஹாலிவுட் பக்கம் தலை காட்டாமல் இருந்தார். 

எனினும், ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் கம்பேக் கொடுத்திருந்தார். அதில் ஜெயலலிதாவாக அவர் நடித்திருந்தார்.

அதற்குப் பின் தற்போது அரசியலில் பிசியாக இருக்கும் இவர், தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகின்றார். அதில் போட்டியிடுவதற்காக நேற்றைய தினம் வேட்பு மனுத் தாக்களையும் செய்திருந்தார். இதன் போது தன்னுடைய சொத்து விவரங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில், நடிகை  கங்கனா ரணாவத்திடம் 28 கோடி அசையும் சொத்துக்கள், 62 கோடி அசையா சொத்துக்கள் உட்பட தன்னிடம் 90 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனது கையில் 2 லட்சம் ரூபாய் ரொக்கமும், வங்கிக்க கணக்கில் ஒரு கோடியே 35 லட்சமும் இருப்பதாக தெரிவித்துள்ளதோடு, தன்னிடம் பி.எம்.டபிள்யூ, பென்ஸ், மெர்சிடிஸ் மேபேஜ் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும், 6.5 கிலோ தங்கம், 60 கிலோ வெள்ளி, 3 கோடி மதிப்புள்ள 14 கேரட் வரை வைர நகைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது இந்த தகவல்கள் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement