திரையுலகின் தந்தை என போற்றப்படும் மறைந்த தியேட்டர் அதிபர் டி.இராமானுஜம் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. கலைப்புலி எஸ்.தாணுவின் ஏற்பாட்டில் விழா வெகு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.மேலும் இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், கே.ஆர் மற்றும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கே.ராஜன், சத்யஜோதி தியாகராஜன், தேனாண்டாள் முரளி, நடிகர் நாசர் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கமல்ஹாசன் மேடையில் உரையாற்றும் போது இந்த விழாவிற்கு என்னை அழைக்காவிட்டாலும் நான் வந்திருப்பேன் என குறிப்பிட்டார் மேலும் அவர் டி.இராமனுஜத்தை திரையுலகின் தந்தை என்று சொல்வது மிகப் பொருத்தமானது இவருக்கு விழா எடுக்க யார் யாருக்கு எல்லாம் எண்ணம் தோன்றியதோ, அத்தனை பேருக்கும் எனது நன்றி என வாழ்த்தியிருந்தார்.
Listen News!