• Sep 12 2025

அடடே.. "விஷால் 35" படத்தின் டீசர் எப்போது தெரியுமா.? படக்குழு வெளியிட்ட அதகள அப்டேட்.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

திரையுலகில் ஸ்டைலிஷ் ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஷால், தற்போது தனது 35வது படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் இந்தப் படம் தற்போது ‘விஷால் 35’ என்ற பெயரில் பரவலாக அழைக்கப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில், டீசர் நாளை காலை 11.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர். அத்துடன் புதிய டைட்டில் என்னவாக இருக்கும்? விஷால் எப்படியொரு மாஸ் லுக்கில் காட்சி அளிக்கப்போகிறார்? இயக்குனர் ரவி அரசு கொண்டுவந்திருக்கும் திருப்பங்கள் என்ன? என்ற கேள்விகள் இணையத்தில் பரவி வருகின்றன.

'விஷால் 35' படத்தை இயக்குபவர் ரவி அரசு. இவர் தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான கதை அமைப்புகளாலும், சமூக கருத்துகளுடன் கூடிய விறுவிறுப்பான திரைக்கதைகளாலும் புகழ்பெற்றவர். 


படக்குழுவின் தரப்பிலிருந்து கிடைக்கும் தகவலின்படி, இது ஒரு அதிரடி ஆக்‌ஷன்-டிராமா படமாக உருவாகி வருகிறது. இதன் திரைக்கதை நவீன நகர வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை மையமாக கொண்டிருப்பதாகவும், விஷால் ஒரு புது விதமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement