2023 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தின் ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய கொண்டாட்டமாகவும் காணப்பட்டது. இதில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் மிரட்டி இருந்தார்.
இதை தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட போதும் தற்போது ஜனவரி 23ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுகின்றது.
d_i_a
அதேவேளை குட் பேட் அக்லி திரைப்படம் எதிர்வரும் மே தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. அன்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் அஜித், ரஜினி ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காணப்படுகின்றார்கள்.
இந்த நிலையில், நடிகை த்ரிஷாவை சந்தித்த செய்தியாளர்கள் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தொடர்பில் கேள்வி எழுப்பிய போது அப்படியா? எப்போ ரிலீஸ்? என்று மிகவும் எதார்த்தமாக பதில் அளித்துள்ளார். தற்போது அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகின்றது.
அதன்படி குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் பற்றி செய்தியாளர்கள் கேட்க, தனக்கு நிஜமாகவே ரிலீஸ் தேதி பற்றி தெரியாது. டைரக்டரிடம் தான் கேட்க வேண்டும் என ரொம்ப கூலாகவும் பதில் சொல்லி உள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!