• Apr 30 2026

வெளியானது தனுஷின் "கர" படத்தின் ரிலீஸ் தேதி.. எப்போது தெரியுமா.?

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கர” திரைப்படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.


தனுஷ் – விக்னேஷ் ராஜா கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதால், “கர” படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அதிக கவனம் கிடைத்து வருகிறது. சமூக பின்னணியுடனான ஆக்ஷன்-டிராமா வகை படமாக இது உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றியுள்ளார். தனுஷுடன் இணைந்து இந்த படத்தில் மமிதா பைஜூ மற்றும் ஜெயராம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மமிதா பைஜூவின் கதாபாத்திரம் கதையின் திருப்புமுனையாக அமையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Advertisement