• Aug 25 2026

திரைப்படங்கள் தராத வரவேற்பா? பூஜா ஹெக்டேவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் பூஜா ஹெக்டே, தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களால் மீண்டும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.


தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள பூஜா ஹெக்டே, தனது அழகும் நடிப்பும் காரணமாக தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். வெற்றி, தோல்வி என்ற கணக்குகளைத் தாண்டி தொடர்ந்து முக்கியமான பட வாய்ப்புகளைப் பெற்று வரும் நடிகைகளில் ஒருவர்.

இந்த நிலையில், சமீபத்தில் அவர் நடத்திய புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. கிளாமரான உடையில், ஸ்டைலான தோற்றத்துடன் போஸ் கொடுத்துள்ள பூஜாவின் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

இந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்து வரும் நிலையில், பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் லுக் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மேலும், அவரது அடுத்தடுத்த திரைப்பட அறிவிப்புகளையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement