தமிழ் சினிமாவில் துணை நடிகையாக பல படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை காதல் மல்லேஸ்வரி தற்போது கடுமையான உடல்நலப் பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நுரையீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 20 நாட்களாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்படுகிறது.
அவரது உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்களின் படி, சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால், பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடம் நிதி உதவி கோரி அவர் தனது GPay எண்ணை பகிர்ந்து உதவி கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி, பலரையும் உருக்கியுள்ளது.
காதல் மல்லேஸ்வரி தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்களில் நடித்தவர். குறிப்பாக காதல் திரைப்படத்தில் நடிகை சந்தியாவின் அம்மாவாக நடித்ததன் மூலம் அவர் ரசிகர்களிடையே அறிமுகமானார்.
மேலும், தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை ஜோடியாக திகழ்ந்த கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். குறுகிய காட்சிகளில் தோன்றினாலும், தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்தவர் என்ற பெயரை பெற்றிருந்தார்.
Listen News!