• Jul 21 2026

எதிர்பார்ப்புகளை தூக்கி எறிந்த ‘எங்கள் தங்கம்’ ட்ரெய்லர்.. சமந்தாவுக்கு என்ன தான் ஆச்சு.?

shali / 1 month ago

Advertisement

Listen News!

பி.வி. நந்தினி ரெட்டி இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘எங்கள் தங்கம்’ தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே வைரலாகி, பல லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.


ஆக்ஷன், காமெடி மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம், முழுமையான எண்டர்டெயின்மென்ட் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக சமந்தாவின் மாறுபட்ட கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது. உணர்ச்சி பூர்வமான காட்சிகளுடன் கூடிய அதிரடி தருணங்களும், நகைச்சுவை கலந்த குடும்ப சூழலும் ட்ரெய்லரில் தெளிவாக வெளிப்படுவதால், படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வரும் 19ம் தேதி வெளியாக உள்ள இப்படம், திரையரங்குகளில் குடும்ப ரசிகர்களை அதிகம் கவரும் என திரை வட்டாரங்கள் கணிக்கின்றன. சமந்தாவின் நடிப்பு திறன், கதையின் வேகம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இணைந்து இப்படத்தை ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement