• Sep 20 2024

பணத்திற்காக பிக்பாஸ் ஷிவானி செய்த காரியம்-இப்படியா செய்வது..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


விஜய்டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ஷிவானி நாராயணன். இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து ஜு தமிழில் இரட்டை ரோஜா என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இந்த சீரியல் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்த இவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்குபற்றினார். இந்த நிகழ்ச்சியில் பாலாஜியுடனுன் காதல் வலையில் விழுந்ததாக கிசுகிசுக்கப்பட்டார். இருப்பினும் தாங்கள் இருவரும் நண்பர்கள் என்று தான் கூறி வருகின்றனர்.

இதனை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாகவும் நடித்து வந்தார்.அதன் பிறகு பெரிதும் படங்களில் கெமிட்டாகவில்லை.

இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் அவர் ரசிகர்களை ஈர்ப்பதற்காக அதிகம் கிளாமராக டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வந்தார்.

தற்போது மேலும் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஷிவானி இன்ஸ்டாகிராமில் சம்பாதிப்பதற்காக ஒரு gambling appக்கு விளம்பரம் செய்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர். பணத்திற்காக இப்படி இறங்கிட்டாரே எனவும் ட்ரோல் செய்கின்றனர்.




 



Advertisement

Advertisement