இளைய தளபதி விஜய் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியிருந்த ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனையால் இழுபறி நிலையில் காணப்பட்டது. கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆக இருந்த இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், இணையதளத்தில் லீக் ஆனது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
இது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படத்தில் நூற்றுக்கணக்கானோரின் உழைப்பு இருக்கிறது என்றும், படத்தை லீக் செய்த குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தை லிங்க் செய்த இணையதள பக்கங்களை தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். இணையதளங்கள், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை முடக்கிய போலீசார், அந்தப் படத்தை லீக் செய்த நபர்களையும் மும்முரமாக தேடி வருகின்றனர்.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மும்முரமாக பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது அரசியல் பிரவேசத்திற்கு பிறகு சினிமா துறையில் மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட குடும்ப ரீதியாகவும் பல பிரச்சனைகள் எழுந்தன.
இவ்வாறான நிலையில், தேர்தல் முடிந்த பிறகு அடுத்த மாதம் ஜனநாயகன் படத்தை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் கடந்த வியாழக்கிழமை படத்தின் ஐந்து நிமிட காட்சி முதலில் வெளியானது. அதன் பின்பு முழுப் படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே ஜனநாயகன் படத்தை லீக் செய்த வெப்சைட்டுகளை தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Listen News!