• May 18 2026

முதல் படமே இப்படி வெற்றியா.? 11 நாட்களில் குவிந்த மொத்த வசூல் விபரம் இதோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கி நடித்த திரைப்படம்தான் 'யூத்'. இந்த படம் பள்ளி பருவத்தில் இடம்பெறும் குறும்புகள், காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

முதன்முதலாக நாயகனாக நடித்திருக்கும் கென் கருணாஸ் தனது இயல்பான நடிப்பால் இளைஞர்களை கட்டிப்போட்டுள்ளார். மேலும் படத்தில் பதின்ம வயதில் ஏற்படும் குழப்பங்களையும் சந்தோஷங்களையும் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க பள்ளி குறும்புகளையும் நண்பர்களின் காட்சிகளையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

எனினும் இரண்டாவது பாதி குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு காணப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் ஜி.வி. பிரகாஷின் காதல் உணர்ச்சிகளைக் கொண்ட மென்மையான இசையும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.


அதேபோல் இதில் சிம்புவின் குறிப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக காணப்படுகிறது. எனினும் சில இடங்களில் காதல் பற்றிய பெண்களின் பார்வை பலவீனமாக காணப்படுகிறது என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் கென் கருணாஸ் இயக்கிய 'யூத்' திரைப்படம் முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த திரைப்படம் சுமார் 11 நாட்களில் 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement