• Jun 07 2026

பயமுறுத்தினாங்க.. ஆனாலும் சூடுகாடு தான் எனக்கு கோவில்.! நடிகை தீபா அதிரடிக் கருத்து

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை தீபா சமீபத்தில் பகிர்ந்துள்ள மனதை தொடும் அனுபவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த சவால்கள் மற்றும் அதனை எதிர்கொண்ட விதம் குறித்து அவர் உருக்கமாக பேசியுள்ளார்.


“இந்த வீடு நானும் என் வீட்டுக்காரரும் சேர்ந்து உழைத்து கட்டிய வீடு. எங்கள் வீட்டுக்கு பின்னால் ஒரு சுடுகாடு இருக்கிறது. நாங்கள் இங்கு குடியேறும் போது பலரும் ‘சுடுகாடு பக்கத்தில் வீடு கட்டுகிறீர்களே’ என்று எங்களை பயமுறுத்தினர். ஆனால் அந்த சுடுகாட்டின் ஆசீர்வாதமோ என்னவோ, இன்று எங்கள் வீடு மாடி வீடாக உயர்ந்துள்ளது.” என்று அவர் கூறினார்.

மேலும், “அதனால் நான் அந்த இடத்தை ஒரு சுடுகாடாக பார்க்கவில்லை. அது எனக்கு ஒரு கோவில் மாதிரி. தினமும் அதை நினைத்து மனதில் நன்றி கூறுகிறேன்.” என்றார். அவரது இந்த வார்த்தைகள் பலரையும் ஆழமாக பாதித்துள்ளன.

பயம் மற்றும் நம்பிக்கைக்கு இடையில் இருக்கும் மனித மனநிலையை அழகாக வெளிப்படுத்தும் இந்த கருத்து, பலரிடமும் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கியுள்ளது. சூழ்நிலையை எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தான் வாழ்க்கையின் அர்த்தம் இருக்கிறது என்பதை தீபாவின் இந்த அனுபவம் நினைவூட்டுகிறது.


Advertisement

Advertisement