• Apr 15 2026

திடீரென தலைகீழாக மாறிய ஓட்டிங் நிலவரம்! சேப் சோனுக்குள் சென்ற மாயா! வெளியேறுவது யார்? ஷாக்கிங் தகவல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான்பிக் பாஸ். இந்த ஏழாவது சீசனில் இந்த வாரம் ஒன்பதாவது எலிமினேஷன் நடைபெறவுள்ளது. அதன்படி மாயா சேப் சோனுக்குள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தற்போது வெளியான நாமினேஷன் பட்டியலில் அர்ச்சனா, விசித்ரா, ரவீனா, மணி, பூர்ணிமா, அக்ஷயா, பிராவோ மற்றும் மாயா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்த நிலையில், மிக குறைந்த ஓட்டுக்களை பெற்று கடைசி இடத்தில்  மாயா காணப்பட்டார். அவரை தொடர்ந்து பிராவோ, அக்ஷயா ஆகியோர் இருந்தனர். 


இவ்வாறான நிலையில், தற்போது ஓட்டிங் நிலவரம் அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. அதன்படி, மாயாவுக்கு ஓரளவு ஓட்டிங் கிடைத்த நிலையில், அவர் அக்ஷயா, பிராவோவை காட்டிலும் மேலதிகமான ஓட்டுக்களை பெற்று முன்னேறி உள்ளார். 

மேலும் இவர்களை விட ஓரளவுக்கு ஓட்டுகளை பெற்ற பூர்ணிமா தற்போது குறைவான ஓட்டுகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 


ஆனால் இவருக்கும் பிராவோ மற்றும் அக்ஷயா ஆகியோருக்கும் இடையே நூற்றுக்கும் குறைவான ஓட்டுகளே வித்தியாசம் உள்ளது. 

இதே நிலை நீடித்தால் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கன்டென்ட் கொடுக்கும் அவரை வைத்துக் கொண்டு பிராவோ அல்லது அக்ஷயாவையே வெளியேற்றுவார்கள் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

Advertisement

Advertisement