• Jan 19 2025

ரச்சிதா மீதான லவ் அவன்கிட்ட இன்னும் அப்படியே இருக்கு; ஆனா..! தினேஷின் நெருங்கிய நண்பர் பகீர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

'பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான்  நடிகை ரச்சிதா. அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். 

எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் தற்போது பிரிந்துள்ளனர். ஆனால் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7இல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் தினேஷ்.

இந்த நிலையில், தினேஷின் நெருங்கிய நண்பரும் சின்னத்திரை நடிகருமான சரத் சந்திரா, ரச்சிதாவிற்கும் தினேஷிற்கும் இடையே நடந்த பிரச்சினை குறித்து பேசி இருக்கிறார்.அதன்படி அவர் கூறுகையில், 

''தினேஷுக்கும் எனக்கும் பல வருஷ நட்பு. நண்பன்னு சொல்றதைவிட எங்க வீட்டுல ஒருத்தனாத்தான் அவனை நினைக்கிறேன். என் குழந்தை மேல உயிரா இருப்பான். அந்தக் குழந்தைக்கு மொட்டை போட்டப்ப தாய்மாமன்னு அவன் மடியில உட்கார வச்சுதான் மொட்டை போட்டுக் காது குத்துனோம். அப்ப ஒரு வார்த்தை சொன்னான், என் மனைவி கூட என்னை மதிக்காம விட்டுட்டுப் போயிட்டாங்க. ஆனா நீ தாய் மாமன் அந்தஸ்து தந்திருக்கன்னு!' அந்த வார்த்தையைக் கேட்ட நொடி எனக்கு ரொம்பவே கஷ்டமாயிடுச்சு. இப்பவும் காலையில் பத்து மணிக்கு வீட்டுல இருந்து கிளம்பினான்னா, இரவு தூங்கத்தான் வீட்டுக்குப் போவான். மற்ற நேரம் வேலை இல்லாட்டியும் வீட்டுக்குப் போக மாட்டான். காரணம் தனிமை. அதுவும் கடந்த மூணு வருஷமா தனிமையால ரொம்பவே கஷ்டப்பட்டுகிட்டு இருக்கான்.


ரச்சிதாவும் எனக்குத் தங்கச்சி மாதிரிதான். அவங்க ரெண்டு பேருக்குமிடையிலான பிரச்னை என்னன்னு அவங்க ரெண்டு பேரைத் தவிர வேற யாருக்கும் நூறு சதவிகிதம் தெரியாது. அதனாலேயே என்னதான் நண்பண்னாலும் ஓரளவுதான் என்னால அந்த விஷயத்துல அவனுக்கு உதவ முடிஞ்சது. பிக் பாஸ் போகணும்கிறது அவனுடைய தீவிரமான ஆசை. கடந்த சீசன்லயே ரச்சிதா டைட்டில் வாங்கிடுவாங்கன்னு அசைக்க முடியாத நம்பிக்கை அவங்கிட்ட இருந்தது. ஆனா அது நடக்காததுல வருத்தப்பட்டான்.


அடுத்த சீசன்ல அதைச் சரி செய்யலாம்ன்னு சொல்லிட்டிருந்தான். அதனால இந்த சீசன்ல முதல் நாளே போவானுதான் நம்பினேன். ஆனா வைல்டு கார்டு மூலமாத்தான் போனான். அதேநேரம் நல்லா விளையாடிட்டு வர்றான். விளையாடுறான்னு சொல்றேன்னா, ஷோவை நல்லா ஹேண்டில் பண்றான். நிகழ்ச்சிக்காக எதையும் அவன் செயற்கையாச் செய்யல. அதுதான் அவன் டாப் 5 க்குள் நிச்சயம் வருவான்னு நான் நம்பக் காரணம். தினேஷுக்கு டைட்டில் கிடைக்குமான்னு இப்ப என்னால சொல்ல முடியல. கிடைச்சா அதை எடுத்துட்டு நேரா ரச்சிதா கிட்டத்தான் போவான். அது மட்டும் நிச்சயம் எனக்குத் தெரியும்.


ஆனா ரச்சிதா சைடுல என்ன மனநிலையில இருக்காங்கன்னு எனக்குத் தெரியல. ஆனா நெருங்கிய நண்பன் என்கிற முறையில என்னால் ஒரு விஷயத்தை உறுதியா சொல்லமுடியும். ஒருவேளை இவனை விட்டு ரச்சிதா பிரிஞ்சா, இன்னொரு திருமண வாழ்க்கைங்கிற எண்ணம் தினேஷுக்குச் சுத்தமா இல்ல. நான் ஒரு தடவை இதுபத்தி அவங்கிட்டயே கேட்டேன். அவன் சொன்னதைத்தான் நான் இங்க சொல்றேன். ரச்சிதா மீதான லவ் அவன்கிட்ட இன்னும் அப்படியே இருக்கு. ரெண்டு பேருக்குமிடையிலான பிரச்னை சரியாகுமாங்கிறது காலத்தின் கையில்தான் இருக்கு'' என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement