• Sep 20 2024

பாத்ரூமில் தாப்பாள் போடாம குளித்த விஸ்ணு - ஷாக்கில் பூர்ணி! பிக்பாஸ் வீட்டின் அலப்பறைகள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் குளியலறை விவகாரமொன்று வைரலாகி வருகின்றது. அதன்படி, தான் குளிப்பதை பூர்ணிமா பார்த்துவிட்டதாக விஷ்ணு மாயாவிடம் புலம்பும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுவரை இடம்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் இந்த சீசன் மட்டும் தான் இரண்டு வீடுகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.  இதனால் காரணமாக கடந்த சீசன்களை விட இம்முறை பிக்பாஸ் வீடு மேலும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

அதேவேளை, பிக்பாஸ் வீட்டில் குளியலறை விவகாரமொன்று தற்போது பெரிதளவில் பேசப்பட்டு வருகின்றது.

அதன்படி, தான் பாத்ரூமில் டாப்பால் போடாமல் குளித்ததை பூர்ணிமா பார்த்துவிட்டதாக  விஷ்ணு மாயாவிடம் கூறுகிறார். அதற்கு 'டாப்பா போடாம உங்கள யார் குளிக்க சொன்னா' என பூர்ணிமா கேட்க, 'தனக்கு மட்டும் அநியாயம் நடந்துட்டு' என்று கூறி புலம்புகிறார் விஸ்ணு. குறித்த காணொளியை வைரலாகியுள்ளனர் பிக்பாஸ் பிரியர்கள்.

இதேவேளை, பிக்பாஸ் நிகழ்ச்சி டிவியில் ஒரு மணி நேரம் மட்டும் ஒளிபரப்பப்படுவதால் அதில் மிஸ் ஆகும் சில விஷயங்களை ரசிகர்கள் ஓடிடியில் வைரலாக்கி விடுகின்றனர்.

இதனை பார்க்கும் ரசிகர்கள் அதில் சுவாரஸ்யமானவற்றை மட்டும சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement