• Sep 20 2024

வனிதா மகளையே அழவைத்த பிரதீப்! இணையத்தில் ட்ரெண்டாகும் ஜோவிகா.? பிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் சாதாரணமப்பா

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள டாஸ்கில், போட்டியாளர்கள் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து சக ஹவுஸ்மெட்ஸ்க்கு லைக் அல்லது டிஸ் லைக் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில், பிக்பாஸ் வீட்டில் தற்போது புதிதாக ஸ்டார் டாஸ்க் என்ற புதிய டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . 

அதன்படி, பிக்பாஸ் போட்டியாளர்கள்  குடும்பத்தினர் வெளியிட்டுள்ள காணொளியை பார்த்து சக ஹவுஸ்மெட்ஸ்க்கு லைக் அல்லது டிஸ் லைக் கொடுக்கலாம். 

இதன்போது குறித்த போட்டியில், வனிதாவின் மகளான ஜோவிகாவுக்கு அவரின்  குடும்பத்தினர் வெளியிட்ட வீடியோவுக்கு லைக் கொடுத்துள்ளார் பிரதீப் ஆண்டனி. 

அதன்பின் அவர் கூறுகையில், 'எனக்கு வனிதாவை ரொம்ப பிடிக்கும். நான் அவரை பார்ப்பதற்காக அங்கே போனேன். ஆனால் அங்கு திரையில் அவங்க தங்கச்சிதான் இருந்தாங்க சோ நான் உனக்கு லைக் கொடுக்கிறேன்' என்று ஜோவிகாவுக்கு சொல்கிறார். இதன்போது, அவர் கூறிய வார்த்தைகளை கேட்டு ஜோவிகா கண்கலங்கி அழுதுள்ளார்.

இதேவேளை, பிக்பாஸ் வீட்டில் கடந்த நாட்களில் பிரதீப் – ஜோவிகா இடையே கடுமையான விவாதம் இடம்பெற்ற போதும்,  தற்போது பிரதீப் சொன்னதை கேட்டு ஜோவிகா கண்கலங்கியுள்ள ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Advertisement

Advertisement