தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், நடிகை சாய் தன்ஷிகாவுடன் இன்று (ஆகஸ்ட் 29, 2025) நிச்சயதார்த்தத்தில் இணைகின்றார். இந்நிகழ்ச்சி, விஷாலின் பிறந்தநாளான இன்று, சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில், குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்வாக நடைபெறுகிறது.
நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவின் காதல் செய்தி, சில மாதங்களுக்கு முன்னரே பரவலாக அறியப்பட்டது. ஒரு திரைப்பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் இருவரும் பொதுமக்கள் முன்னிலையில் தங்களது காதலை உறுதிப்படுத்தினர்.
அதன்பின்னர், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது, “நடிகர் சங்க கட்டிட வேலை முழுமையாக முடிந்த பிறகு, எனது பிறந்த நாளான ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் நடைபெறும்” என்று விஷால் தெரிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.
ஆனால் சில தினங்களுக்கு முன்னர், அவர் தனது சமூக ஊடக பக்கத்தில், “திருமணம் இல்ல. ஆனால், ஒரு நல்ல செய்தி சொல்றேன்” என கூறி குழப்பத்தை ஏற்படுத்தினார். தற்போது அந்த 'நல்ல செய்தி' என்னவென்றால், இன்று இருவரும் நிச்சயதார்த்தம் செய்கின்றார்கள் என்பது தான்.
இவ்வாண்டு அவர் தனது பிறந்த நாளை, வாழ்க்கைத் துணையுடன் புதிய உறவை தொடங்கி கொண்டாடியுள்ளார் என்பது ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!