• Sep 20 2024

ரெக்க முளைச்ச தேவதை சார் அவ.. ஊர்பி ஜாவேத் வெளியிட்ட வைரல் வீடியோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

1997 ஆம் ஆண்டு லக்னோவாவில் பிறந்தவர் தான் நடிகை ஊர்பி ஜாவேத். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கேயே முடித்து விட்டு அதற்குப் பிறகு மாடலிங், சின்னத்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். எப்போதும் ட்ரெண்டிங் இருக்க வேணும் என்பதற்காகவே தற்போது வரையில் உடைகளில் வித்தியாசம் காட்டி வருகின்றார்.

பிக் பாஸில் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அதன்பிறகு சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காகவே வலம் வருகின்றார். ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பல சர்ச்சையான விஷயங்களையும் செய்து வருகின்றார்.

இதனால் கையில் கிடைக்கும் பொருட்கள் எல்லாவற்றையும் உடையாக தயாரித்து அதனை அணிந்து சோசியல் மீடியாவில் வெளியிடுவதோடு வீதியில் உலா வருவதை வழமையாகக் கொண்டுள்ளார். சிறுவயதில் இருந்தே அவருக்கு வித்தியாசமான உடைகளை அணிவது என்றால் மிகவும் பிடிக்கும். இதனாலையே இப்படியான பல முயற்சிகளை செய்து வருகின்றார்.


இவருடைய டிரஸ் சென்ஸ்க்கு பின்னாடி ஒரு குழுவே அவருக்காக பணி புரிகின்றதாம். சமூக வலைதளங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து தான் வருகின்றார்கள்.

இந்த நிலையில் தற்போது ஊர்பி ஜாவேத் சிறகுகள் முளைத்த தேவதை போல் கருப்பு நிற ஆடையில் வெளியிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement