நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கியும் நடித்தும் உருவான யூத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி காதலை மையமாகக் கொண்ட இந்த படம், இளைஞர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக நகைச்சுவை கலந்த காட்சிகள் மற்றும் இளம் தலைமுறையை கவரும் கதைக்களம் காரணமாக படம் வசூலிலும் ஏற்றம் கண்டுவருகிறது. இப்படத்தில் தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, அனிஷ்மா, மீனாட்சி தினேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் கென் கருணாஸ். அதற்கு பின்பும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். யூத் படத்தின் மூலம் ஹீரோவாகவும் இயக்குநராகவும் தன்னை நிரூபித்துள்ளார்.

இந்த நிலையில், யூத் படத்திற்காக கென் கருணாஸ் ரூ. 2 கோடி சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.. முதல் படத்திலேயே கென்னுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததாக கூறப்படுவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், இந்த சம்பள விவரம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!