• May 30 2026

கிளாமர் ஆடையில் குத்தாட்டம் போட்ட மீனா தங்கச்சி.! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இளைஞர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இதில் முத்து, மீனா, மனோஜ், ரோகிணி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் போலவே, மீனாவின் தங்கையாக நடித்துவரும் சங்கீதா லியோனிஸும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சங்கீதா லியோனிஸ், சின்னத்திரையில் புதுமுகமாக இருந்தாலும், தனது இயல்பான நடிப்பால் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். இவர் மருத்துவ படிப்பை முடித்தவர். 

அதாவது, டாக்டர் என்ற அடையாளத்துடன் இருந்தபோதிலும், தனது ஆர்வத்தினால் நடிப்பு துறையில் கால் பதித்து தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார்.


சீரியலில் அமைதியான மற்றும் பாசமான தங்கையாக தோன்றும் இவரின் கதாபாத்திரம் குடும்ப பெண்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களிலும் சங்கீதா மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். 

குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தனது போட்டோஷூட் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்கள் போன்றவற்றை அடிக்கடி பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை சங்கீதா லியோனிஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் கட்டை சட்டை அணிந்து குத்தாட்டம் போட்ட சங்கீதாவை பார்த்த ரசிகர்கள், மீனா தங்கச்சிக்கு இது தேவையா? என கமெண்ட்ஸ் பண்ணி வருகிறார்கள். 

Advertisement

Advertisement