• May 30 2026

அந்தத் தம்பிகள் வேற வேலைய காட்டிட்டாங்க.. பல்டி அடித்தாரா சமுத்திரக்கனி.?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் - த்ரிஷா இணைந்து ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சமீபத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது. விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்ததாக கூறப்படும் விவாகரத்து மனு தொடர்பான தகவல்கள் பரவி கொண்டிருந்த நிலையில், இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் தோன்றியது சர்ச்சையை அதிகரித்தது.

மேலும், அந்த நிகழ்ச்சியில் விஜய் மற்றும் த்ரிஷா ஒரே மாதிரியான மேட்சிங் ஆடையில் வந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களும் கருத்துக்களும் எழுந்தன.

இந்த விவகாரம் குறித்து நடிகர் சமுத்திரக்கனி கூறிய கருத்தும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர், இத்தனை விஷயங்கள் நடந்து கொண்டிருக்கையில் இப்படி வெளியே வர வேண்டாமே, எல்லாத்தையும் நாலு சுவற்றுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது தானே.. என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை தூண்டியது.

இந்த நிலையில்,  நடிகர் சமுத்திரக்கனி அவ்வாறு பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பில் விளக்கம் கொடுத்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், என்னை வீடியோ எடுக்கும் போது என்ன நடந்தது எனக்கு நன்றாக தெரியும். அங்கு இருந்த ஒரு தம்பி மட்டும் தான் அந்த வீடியோவை எடுத்தார். ஆனால் பின்னர் அந்த வீடியோவுக்கு ‘மானே தேனே’ போட்டு வேறு விதமாக மாற்றி வெளியிட்டுள்ளனர்.

மேலும், எனக்கு மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியே வேறொன்று பேசத் தெரியாது. சந்தோஷமாக இருந்தாலும், வலியாக இருந்தாலும், அது அப்படியே வெளிப்பட வேண்டும் என்பதே என் இயல்பு.

அந்த வீடியோ குறித்து எந்த குற்ற உணர்வும் இல்லை என்றும், அதை பேசி வருத்தப்பட வேண்டிய தேவையும் இல்லை என்றும் அவர் கூறினார். அத்துடன், அது ஒரு அக்கறை, ஒரு வலி. என் மனதில் பட்டதை தான் நான் சொன்னேன்  எனவும் சமுத்திரக்கனி தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த விளக்கம் வெளியாகியுள்ள நிலையில், அவரது பேச்சு மீண்டும் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement