• Apr 15 2026

பிக் பாஸில் மாஸாக என்ட்ரி கொடுத்த வினுஷா! 70 கேமரா முன்னாடி நிக்சனுக்கு தரமான சம்பவம்?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. அதில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,  பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களை சந்திக்க மீண்டும் வருகை தந்துள்ளார் பிக் பாஸ் சீசன் 7ன் முன்னாள் போட்டியாளர் வினுஷா.


அதன்படி, உள்ளே வந்த வினுஷா பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களை கடந்த போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லியுள்ளார். மேலும் முயல் டாஸ்கில் நல்லா விளையாடியதாக விஷ்ணுவை புகழ்கிறார்.


இதை தொடர்ந்து, நிக்சன் போன் பேசினான என தினேஷ் கேட்க, ஆமா பேசினான்.. 70 கேமரா முன்னாடி பேசின விஷயத்தை 70 கேமரா முன்னாடியே பேசிக்கலாம் என வினுஷா சொல்லுகிறார். எனவே பொறுத்து இருந்து பார்ப்போம். பிக் பாஸ் வீட்டிற்கு நிக்சன் உள்ளே வருகிறாரா என...இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.


Advertisement

Advertisement