• Jul 27 2024

தங்கலான் படத்தில் பேய் நடிப்பு நடித்த விக்ரம்! ரிஸ்க் எடுத்த மேக்கிங் வீடியோ ரிலீஸ்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக காணப்படும்  நடிகர் தான் சியான் விக்ரம். இவர் சேது என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

இதைத் தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன் தொடங்கி இறுதியாக கோப்ரா படம் வரையில் எண்ணற்ற திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார். இவருக்கு நிகர் இவரே என்ற வகையில் இவர் நடிக்கும் படங்களும் அவ்வளவு பிரமாதமாக காணப்படும்.

தமிழ் சினிமாவில் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத கதாபாத்திரங்களையும், தோற்றங்களையும் எடுத்து நடிப்பதில் இவர் கைதேர்ந்தவராக காணப்படுகிறார்.


இந்த நிலையில், இன்றைய தினம் தனது 57வது பிறந்த நாளை கொண்டாடும் சியான் விக்ரமுக்கும், அவரது ரசிகர்களுக்கும் விருந்தளிக்கும் விதமாக அவர் தற்போது நடிக்கும் தங்கலான் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படம் கே.ஜி.எஃப் பின்னணியில் நடக்கும் விஷயங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது தங்கலான் பட டீசரை பார்த்த ரசிகர்கள் அதனை கொண்டாடி வருவதோடு, சியான் விக்ரமுக்கு தமது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த டீசர், 


Advertisement

Advertisement