• May 21 2024

சென்னையில் வசூலில் வேற லெவலில் அள்ளி வரும் விக்ரம் படம் - அளவில்லாத மகிழ்ச்சியில் படக்குழுவினர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்து வசூல் மழையில் ஆட்டம் போடும் திரைப்படம் விக்ரம். இத் திரைப்படம் கடந்த ஜூன் 3 வெளியாகியது.

மேலும்,இப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜுன்தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மற்றும் கௌரவ வேடத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே இப்படம் தான் மிகப்பெரிய வெற்றிப்படம் என்றும் வசூலிலும் சாதனை செய்து வருகின்றது என்று கூறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 12 நாட்களின் முடிவில் சென்னையில் மட்டும் ரூபாய் 12.5 கோடி வரை வசூலித்து உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement