• May 02 2024

நடிகர் மணிவண்ணனின் 9 ஆண்டு நினைவு தினம்-அனுதாபங்களைத் தெரிவித்து வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், எழுத்தாளராகவும், நடிகராகவும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பவர் தான் நடிகர் மணிவண்ணன். எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் ஏற்று நடிக்கும் தன்மை கொண்ட இவர் தந்தையாகவும், வில்லனாகவும் குணசித்திர வேடங்களில் நடிக்கும் இயல்பு கொண்டவர்.

பாரதிராஜா இயக்கத்தில் 1980-இல் "நிழல்கள்" படத்தின் மூலம் அறிமுகமானவர் மணிவண்ணன். இதனைத் தொடர்ந்து பாரதிராஜாவின் "கொடி பறக்குது" என்ற திரைப்படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் போன்றோருடன் நடித்துள்ளார்.

பல்வேறு படங்களில் தனக்கென உரித்தான பாணியில் வசனங்களை சர்வசாதாரணமாக பேசி தனது நடிப்பை வெளிப்படுத்தி, சிறந்த இயக்குநர் மட்டுமன்றி பெரிய நடிகர் என்பதை நிரூபித்துள்ளார்.

பின்னர் மணிவண்ணன் அவர்கள் செங்கமலம் என்பவரை மணமுடித்தார் அவருக்கு ஜோதி என்ற மகளும் ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர். பின்னர் திராவிட முன்னேற்றக் கழக கட்சியில் சேர்ந்தார் 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.

அத்தோடு இவர் தனது 58-வது வயதில் மாரடைப்பால் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஜூன் 15-ல் இறந்தால் அவரது விருப்பப்படி அவரது உடல் தமிழ் ஈழக்கொடியால் மூடப்பட்டது. இன்றுடன் இவர் இறந்து 9 ஆண்டுகள் ஆகியுள்ளதால் ரசிகர்கள் தங்களுடைய அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement