• May 01 2024

ஏர்போட்டில் கோட் சூட் அணிந்து மாஸாக நடந்து செல்லும் நடிகர் அஜித்- தீயாய்ப் பரவி வரும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் எச். வினோத் மற்றும் நடிகர் அஜித்தின் கூட்டணியில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் வலிமை. இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் கை கோர்த்து AK61 திரைப்படத்தை எடுத்து வருகின்றனர்.

இப்படத்தினை போனிகபூர் தான் தயாரித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றுகிறார்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

https://twitter.com/Anythingf4AJITH/status/1536895980007616512

இப்படத்தின் முதுற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புனேயில் ஜூன் 15ஆம் தேதி முதல் ஆரம்பமாகின்றது எனக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் அஜித் ஏர் போட்டில் செல்லும் மாஸான வீடியோ ஒன்று டுவிட்டர் பக்கத்தில் வலம் வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement